கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! விசாரணை நவ. 27-க்கு ஒத்திவைப்பு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை!யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

இரு பயிற்சி ஆட்டங்களிலும் தோல்வி: மீண்டு வருமா மேற்கிந்தியத் தீவுகள் அணி?

நடப்பு சாம்பியன், இருமுறை டி20 உலகக் கோப்பை சாம்பியன் என்கிற பெருமைகளை உடைய மே.இ. தீவுகள் அணி...

Updated On :

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக விளையாடிய இரு பயிற்சி ஆட்டங்களிலும் நடப்பு சாம்பியனான  மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. 

சூப்பர் 12-க்கு முன்பே தகுதி பெற்ற 8 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளன. இந்திய அணி இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நிலையில் நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி இரு பயிற்சி ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ. தீவுகள் அணி தோல்வியடைந்துள்ளது. அந்த ஆட்டத்தில் மே.இ. தீவுகள் அணி 130/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. எந்த ஒரு பேட்ஸ்மேனும் 30 ரன்கள் கூட எடுக்காமல் ஏமாற்றமளித்தார்கள்.

அடுத்த ஆட்டத்தில் மே.இ. தீவுகள் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தானின் இரு தொடக்க வீரர்களும் அரை சதமெடுத்தார்கள். பதிலுக்கு மே.இ. தீவுகள் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேஸ் அரை சதமெடுத்தார். 

கடைசியாக டி20 உலகக் கோப்பை 2016-ல் நடைபெற்றது. அதில் சாம்பியனான மே.இ. தீவுகள் அணி, தற்போது இரு பயிற்சி ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. 

டி20 உலகக் கோப்பையை இருமுறை வென்ற ஒரே அணி என்கிற பெருமை மே.இ. தீவுகள் அணிக்குத்தான் உள்ளது. ஆனால் 2016 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு விளையாடிய 67 ஆட்டங்களில் 24-ல் மட்டுமே வெற்றி பெற்ற மே.இ. தீவுகள் அணி 36-ல் தோல்வியடைந்துள்ளது. சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்ற 8 அணிகளில் குறைவான வெற்றி/தோல்வி விகிதம் (0.666) உள்ள அணி மே.இ. தீவுகள் அணி தான். 

நடப்பு சாம்பியன், இருமுறை டி20 உலகக் கோப்பை சாம்பியன் என்கிற பெருமைகளை உடைய மே.இ. தீவுகள் அணி 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் எப்படி விளையாடும் என்பது அனைவருக்கும் புதிரான ஒன்றாக உள்ளது. பயிற்சி ஆட்டங்களில் கிடைத்த தோல்விகளில் இருந்து அந்த அணி மீண்டு வருமா?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.