சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல ஆஸி. வீரர் ஓய்வு
By DIN | Published On : 20th October 2021 02:44 PM | Last Updated : 20th October 2021 02:44 PM | அ+அ அ- |

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் அறிவித்துள்ளார்.
31 வயது பேட்டின்சன், 21 டெஸ்டுகள், 15 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார்.
ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணியில் இடம் கிடைக்காது என்பதால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பேட்டின்சன் அறிவித்துள்ளார். காயம் காரணமாக சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் விளையாடாததால் ஆஷஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்காத சூழலில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார்.
இன்னும் நான்கைந்து வருடங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும். அதனால் உள்ளூர் போட்டிகளிலும் கவுன்டி கிரிக்கெட்டிலும் விளையாடவுள்ளதாக பேட்டின்சன் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 81 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.