தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அறிவிப்பு

News image

ஆண்ட்ரூ மெக்டொனால்ட் (கோப்புப் படம்)

Updated On :13 ஏப்ரல் 2022, 5:59 am

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தேர்வாகியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லாங்கர் சமீபத்தில் ராஜிநாமா செய்தார். 

கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை 4-0 என வென்றது. 

2018-ல் தென்னாப்பிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. கடினமான அச்சூழலில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டார். 51 வயது லாங்கர் ஆஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்டுகள், 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தபோதும் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையையும் ஆஷஸ் தொடரையும் ஆஸ்திரேலிய அணி வென்றதால் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்துக்கு மட்டும் லாங்கரின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பியது. இதை ஏற்றுக்கொள்ளாத லாங்கர், தனது பதவியை ராஜிநாமா செய்தார். தன்னுடைய ஒப்பந்தத்தை நீண்ட காலத்துக்கு நீட்டிக்க லாங்கர் விரும்பினார். ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆண்ட்ரூ மெக்டொனால்ட், ஆஸ்திரேலிய அணியின் தற்காலிகப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. நான்கு வருட காலம் பயிற்சியாளராக அவர் பணிபுரியவுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. அதேபோல ஒரு டி20 ஆட்டத்தை வென்று ஒருநாள் தொடரில் 1-2 எனத் தோல்வியடைந்தது. இந்தச் சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் செயல்பட்டார். 

40 வயது ஆண்ட்ரூ மெக்டொனால்ட், ஆஸ்திரேலிய அணிக்காக 2009-ல் 4 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.