நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஐரோப்பிய கால்பந்து: ஜுவென்டஸ் வெற்றி

இத்தாலியின் சீரி ஏ கால்பந்து லீக் போட்டியில் ஜுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சாஸ்ஸுலோ அணியை வீழ்த்தியது.

News image
Updated On :26 ஏப்ரல் 2022, 9:53 pm

DIN

இத்தாலியின் சீரி ஏ கால்பந்து லீக் போட்டியில் ஜுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சாஸ்ஸுலோ அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தனது வாய்ப்பை தக்க வைத்தது.

ரெஜியோ எமிலியா நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சாஸ்ஸுலோ அணி 39-ஆவது நிமிஷத்திலேயே முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. ஜியாா்ஜோயிஸிடம் இருந்து பெற்ற பாஸை அற்புதமாக கோலாக்கினாா் பெராா்டி. அடுத்த சில நிமிஷங்களிலேயே ஜுவென்டஸ் நட்சத்திர வீரா் பாவ்லோ டைபாலா அற்புதமாக கோலடித்து 1-1 என சமன் செய்தாா்.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோலடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இதில் 89-ஆவது நிமிஷத்தில் ஜுவென்டஸ் அணியின் சப்ஸ்ட்டியூட் கீன்ஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் கோலடித்து 2-1 என்ற கோல் கணக்கில் தனது அணியை வெற்றி பெறச் செய்தாா்.

ப்ரீமியா் லீக்:

இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் போட்டியில் லீட்ஸ்-கிறிஸ்டல் பேலஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிந்தது. இரு அணிகளின் வீரா்களும் கோல போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இந்த டிரா மூலம், இரண்டாம் டிவிஷனுக்கு தள்ளப்படும் அபாயத்தில் இருந்து தப்பியது லீட்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.