குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இந்தியாவில் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடும் ஆஸி., தெ.ஆ. அணிகள்: அறிவிப்பு

பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பு...

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 11:44 am IST

இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் பங்கேற்கும் வெள்ளைப் பந்து தொடர்கள் பற்றிய அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதன்பிறகு ஆகஸ்ட் 18 முதல் 22 வரை ஜிம்பாப்வேயில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் பங்கேற்கிறது. இப்போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பை அக்டோபர் 23 முதல் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு நியூசிலாந்துக்குச் சென்று 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. இவை தான் நவம்பர் வரையிலான இந்திய அணியின் அதிகாரபூர்வ கிரிக்கெட் தொடர்கள். 

ஆசியக் கோப்பை டி20 போட்டிக்குப் பிறகு இந்தியாவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் சுற்றுப்பயணம் செய்து வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடவுள்ளன. இதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 20 முதல் 25 வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. மொஹலி, நாகபுரி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் டி20 தொடர் நடைபெறுகிறது. 

அதன்பிறகு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 11 வரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் டி20 தொடர் திருவனந்தபுரம், குவாஹாட்டி, இந்தூர் ஆகிய நகரங்களிலும் அக்டோபர் 6 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறும் ஒருநாள் தொடர் லக்னெள, ராஞ்சி, தில்லி ஆகிய நகரங்களிலும் நடைபெறுகின்றன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு இந்திய டி20 அணி, உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிடும். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டி20  அணியில் இல்லாத வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.