சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் பிரிவில் உள்ள இரு தமிழக வீராங்கனைகளான நந்திதாவும் வைஷாலியும் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள்.
மகளிர் பிரிவில் புள்ளிகள் பட்டியலில் இந்திய ஏ அணி முதலிடத்திலும் இந்திய பி அணி 15-ம் இடத்திலும் இந்திய சி அணி 19-ம் இடத்திலும் உள்ளன.
மகளிர் பிரிவில் நந்திதா, வைஷாலி என இரு தமிழக வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள். அவரவர் அணிகளில் இருவரும் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். இந்திய ஏ அணியில் வைஷாலி, தானியா சச்தேவ் ஆகிய இருவரும் 6 ஆட்டங்களில் தலா 4 வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். இந்திய பி அணியில் வந்திகா அகர்வால் 4 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய சி அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா, அதிக வெற்றிகளை அடைந்த இந்திய வீராங்கனையாக உள்ளார். இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை செஸ் ஒலிம்பியாடில் இந்திய வீராங்கனைகள் பெற்ற வெற்றிகள்

வைஷாலி
இந்தியா ஏ
வைஷாலி 4/6
தானியா சச்தேவ் 4/6
ஹம்பி 2/5
ஹரிகா 0/4
பக்தி குல்கர்னி 3/3
இந்தியா பி
வந்திகா அகர்வால் 4/6
செளம்யா சாமிநாதன் 3/5
மேரி ஆன் கோம்ஸ் 2/4
திவ்யா தேஷ்முக் 1/4
பத்மி ராவத் 0/5
இந்தியா சி
பி.வி. நந்திதா 5/6
வர்ஷினி சாஹிதி 2/4
பிரதியுஷா 2/5
ஈஷா 2/6
விஷ்வா வாஸ்னவாலா 1/3

நந்திதா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


