12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

புயல் வேகத்தில் ரன் குவித்த புஜாரா, மிரண்டு போன ரசிகர்கள்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் லண்டன் ரயல் ஒரு நாள் தொடரில் சசக்ஸ் அணிக்காக விளையாடும் புஜாரா 131 பந்துகளில் 174 ரன்கள் குவித்து கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

படம்: ட்விட்டர் | ராயல் ஒன் டே கப்

Published On :

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் லண்டன் ரயல் ஒரு நாள் தொடரில் சசக்ஸ் அணிக்காக விளையாடும் புஜாரா 131 பந்துகளில் 174 ரன்கள் குவித்து கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சசக்ஸ் அணியின் கேப்டன் புஜாரா இன்று (ஆகஸ்ட் 14) புயல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்றையப் போட்டியில் சசக்ஸ் அணி சர்ரே அணியை எதிர்த்து விளையாடுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, சசக்ஸ் அணி தனது முதல் பேட்டிங்கை தொடங்கியது.

சசக்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களம் கண்ட சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து, சசக்ஸ் அணியின் கேப்டன் புஜாரா மற்றும் டாம் கிளார்க் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அபாரமாக விளையாடி ரன்களைக் குவித்தது. சிறப்பாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

சசக்ஸ் அணியின் கேப்டனான புஜாராவின் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களின் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது. அதிரடி ஆட்டத்தினை பெரிதும் வெளிப்படுத்தாமல் ரன்களை சேர்க்கும் பாணியில் விளையாடும் புஜாரா இன்று ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். அவரது இந்த அதிரடியான ஆட்டமே கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

அதிரடியான  ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 131 பந்துகளில் 174 ரன்கள் குவித்தார். அதில் 20 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவர் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பினை 26 ரன்களில் நழுவ விட்டார்.  இந்த லண்டன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 367 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

34 வயதான புஜாரா இந்தப் போட்டிகளில் மட்டுமல்லாமல் கவுண்டி போட்டிகளிலும் சிறப்பாக ஆடினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் புஜாரா இடம் பெறவில்லை. அதன்பின் 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,094 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 109.40 ஆகும்.

தற்போது, லண்டன் ராயல் ஒரு நாள் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இன்றைய போட்டியில் ருத்ரதாண்டம் ஆடிய புஜாரா இதற்கு முந்தைய போட்டியிலும் சதம் அடித்திருந்தார். அந்தப் போட்டியில் ஒரே ஓவரில் அவர் 22 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.