மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தீபக் சஹார், பிரசித், அக்‌ஷர் அபார பந்துவீச்சு: 189 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே

தீபக் சஹார், பிரசித் கிருஷ்ணா, அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

News image
இந்திய அணி வீரர்களுடன் தீபக் சஹார்
Updated On :18 ஆகஸ்ட் 2022, 10:43 am

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. 

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இன்று ( ஆகஸ்ட் 18) தொடங்கும் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 22-ல் நிறைவடைகிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது. 

ஹராரேவில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கே.எல். ராகுல், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சிராஜ் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணிக்காகக் கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக விளையாடிய தீபக் சஹார், காயத்திலிருந்து மீண்டு வந்து இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டது. முதல் நான்கு பேட்டர் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். இதனால் 101. ஓவர்களில் 31 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது. தீபக் சஹார் சிறப்பாகப் பந்துவீசி முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஜிம்பாப்வே அணி 25 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து தடுமாறியது. 

பின்வரிசை வீரர்கள் இருவர் அதிக ரன்கள் எடுத்து ஜிம்பாப்வேவுக்கு ஓரளவு நல்ல ஸ்கோரைப் பெற்றுத் தந்தார்கள். பிராட் எவான்ஸ் - ரிச்சர்ட் 9-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து அசத்தினார்கள். இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிராட் எவான்ஸ் 33 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரெஜிஸ் 35, ரிச்சர்ட் 34 ரன்கள் எடுத்தார்கள். இந்தியப் பந்துவீச்சாளர்களில் தீபக் சஹார், பிரசித் கிருஷ்ணா, அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.