தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

2-வது ஒருநாள்: ஜிம்பாப்வே மீண்டும் தடுமாற்றம், 161 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 10:34 am

DIN

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது. 

ஹராரேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. ஹராரேவில் நடைபெறும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. தீபக் சஹாருக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் இடம்பெற்றுள்ளார். ஜிம்பாப்வே அணியில் இரு மாற்றங்கள். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றுவிடும். 

முதல் ஒருநாள் ஆட்டம் போலவே 2-வது ஒருநாள் ஆட்டத்திலும் ஜிம்பாப்வே பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள். முதல் 4 விக்கெட்டுகளை 31 ரன்களுக்கு இழந்தது.  21 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. 

ஜிம்பாப்வே அணியின் பின்நடுவரிசை பேட்டர்களான சீன் வில்லியம்ஸ் 42 ரன்களும் ரையன் பர்ல் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்து ஓரளவு நிலைமையைச் சமாளித்தார்கள். ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியப் பந்துவீச்சாளர்களில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்துள்ளார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.