மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஜிம்பாப்வே 2-வது ஒருநாள்: இந்திய அணி முதலில் பந்துவீச்சு

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 10:23 am

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது. 

ஹராரேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. ஹராரேவில் நடைபெறும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. தீபக் சஹாருக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் இடம்பெற்றுள்ளார். ஜிம்பாப்வே அணியில் இரு மாற்றங்கள். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றுவிடும்.

இந்திய அணி: கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவன்,ஷுப்மன் கில், இஷான் கிஷன்,தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சிராஜ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.