ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார்!

2024-2027 வரை ஐசிசி சார்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமத்தை டிஸ்னி ஸ்டார் கைப்பற்றியுள்ளது.
ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார்!

2024-2027 வரை ஐசிசி சார்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமத்தை டிஸ்னி ஸ்டார் கைப்பற்றியுள்ளது.

2024-2027 வரை ஐசிசி சார்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமத்தை ஏற்கனவே டிஸ்னி பெற்றிருந்தது. அடிப்படை கட்டணமாக 11,500 கோடியை ஐசிசி நிர்ணயித்த நிலையில், இருமடங்கு அதிக தொகை கொடுத்து சுமார் 24,000 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது டிஸ்னி ஸ்டார். 

"ஐசிசியுடன் மீண்டும் இணைந்து பயணிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. டிஸ்னி ஸ்டார் கடந்த ஏழு ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளை இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுக் காட்சிகளில் ஒன்றாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது, மேலும் "புவியியல் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் சொத்துக்களின் பார்வையாளர் தளத்தை விரிவுபடுத்தியுள்ளது.

கிரிக்கெட்டுடன், நாங்கள் புரோ கபடி லீக், இந்தியன் சூப்பர் லீக் மற்றும் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச உரிமைகளையும் வழங்குகிறோம்.

டிஸ்னி பெண்கள் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிற கிர்க்கெட்டுக்கு ஒளிபரப்பு உரிமம் கிடைப்பதில் கடுமையான போட்டி இருந்தது" என டிஸ்னி ஸ்டார் அதிபர் கே. மாதவன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com