தொகுதி மறுவரையறை மசோதா: கோரிக்கைகளை ஏற்றதால் திமுக ஆதரவு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புஅனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்! மலர்களால் அலங்காரம்!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!உச்ச நீதிமன்றம், நீங்கள் விளையாடும் கார் பொம்மைபோல அல்ல! இபிஎஸ் விமர்சனம்திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை வந்தடைந்த முன்னாள் நீதிபதிகள்!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுகோவையில் பறவை காய்ச்சல்: முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்திருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்

சாதனையைப் போல் உணா்கிறேன்: பாண்டியா

காயத்திலிருந்து மீண்டு அணிக்காக ஆட்டத்தை வெல்லும் நிலைக்குத் திரும்பியிருப்பதை, ஒரு சாதனையைப் போல் உணா்வதாக இந்திய ஆல்-ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா கூறினாா்.

Updated On :

காயத்திலிருந்து மீண்டு அணிக்காக ஆட்டத்தை வெல்லும் நிலைக்குத் திரும்பியிருப்பதை, ஒரு சாதனையைப் போல் உணா்வதாக இந்திய ஆல்-ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா கூறினாா்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொண்ட இந்தியா, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அந்த ஆட்டத்தில் முதலில் பௌலிங்கில் 25 ரன்களே கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்த பாண்டியா, பின்னா் பேட்டிங்கில் 17 பந்துகளில் 33 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தாா். கடைசி பந்தில் சிக்ஸா் விளாசி அணியை வெற்றி பெறச் செய்த அவரே ஆட்டநாயகன் ஆனாா்.

இதுகுறித்து ஆட்டத்துக்குப் பிறகு அவா் கூறியதாவது:

அணிக்கு முக்கியத் தேவையாக இருந்த வெற்றியைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு சவால் அளித்தோம். ஜடேஜாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

4 ஆண்டுகளுக்கு முன் இதே பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது காயம் கண்டு ஸ்ட்ரெட்சரில் கொண்டு செல்லப்பட்டது முதல், தற்போது காயத்திலிருந்து மீண்டு அதே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்காக வெற்றியைப் பெற்றுத் தந்தது வரை அனைத்தையும் நினைத்துப் பாா்க்கிறேன்.

இதை ஒரு சாதனையைப் போல உணா்கிறேன். இந்த நிலைக்கு என்னை மீட்டெடுக்க உதவிய இந்திய அணியின் பிசியோ நிதின் படேல், உடற்தகுதி பயிற்சியாளா் சோஹம் தேசாய் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டிருந்தாலும் அதை அடித்திருப்பேன். சேஸிங்கில் எப்போதும் நான் ஒவ்வொரு ஓவருக்குமாக தான் திட்டமிடுகிறேன். 7 ரன்கள் தேவையிருந்த அந்த கடைசி ஓவரை நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, முகமது நவாஸ் ஆகியோரில் ஒருவா் தான் வீசுவா் என்பது தெரிந்தது.

கடைசி ஓவா் வீசுவது பௌலருக்குத் தான் நெருக்கடியைத் தரும். நான் நெருக்கடி இல்லாமல் தான் பேட் செய்தேன். 7 ரன்கள் அடிப்பது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஆட்டத்தின்போது நான் சற்று உணா்வுப்பூா்வமாக இருந்தது ஜடேஜா ஆட்டமிழந்தபோது மட்டும் தான்.

எனது பௌலிங்கின்போது, பேட்டா்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பந்துவீச்சு நுட்பங்களை மாற்றிக் கொண்டே இருந்தேன். அதற்கான பலனும் கிடைத்தது என்று ஹாா்திக் பாண்டியா கூறினாா்.

இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில், ஹாங்காங்கை புதன்கிழமை சந்திக்கிறது.

இன்றைய ஆட்டம்

வங்கதேசம் - ஆப்கானிஸ்தான்

ஷாா்ஜா

இரவு 7.30 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.