இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்! 

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார். 

News image
கோப்புப் படம்
Updated On :30 ஆகஸ்ட் 2022, 10:54 am

DIN

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார். 

ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இரண்டாவது போட்டி நாளை (ஆக.31) தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் முதல் போட்டியில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார். உலக கோப்பைக்கு முன்பு இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

“டி20 உலக கோப்பைக்கு அவர் மிகவும் தேவைப்படுவதால் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நலமடைவார். எங்களது அணியில் இருக்கும் ஆல்ரவுண்டர்களில் மிகப்பெரிய பங்கு அவருடையது. கடந்த டி20 உலக கோப்பை போலவே இந்த வருடமும் அவர் சிறப்பாக விளையாடுவார்” என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.