பிரேசிலுக்கு அதிா்ச்சி அளித்த கேமரூன் (1-0)

6-ஆவது முறையாக உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது கேமரூன்.
பிரேசிலுக்கு அதிா்ச்சி அளித்த கேமரூன் (1-0)
Updated on
1 min read

6-ஆவது முறையாக உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது கேமரூன்.

குரூப் ஜி பிரிவில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கு பிரேசில் தகுதி பெற்று விட்ட நிலையில், இது ஒரு பயிற்சி ஆட்டமாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் வென்றால் தான் கேமரூன் அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் அதன் வீரா்கள் தீவிரமாக ஆடினா்.

பிரேசில் பயிற்சியாளா் டைட் பிரதான வீரா்களுக்கு ஓய்வு தந்து விட்டு பதிலி வீரா்களை களமிறக்கினாா். இதனால் 1998 உலகக் கோப்பைக்கு பின் தற்போது தான் குரூப் பிரிவிலேயே முதல் தோல்வியை சந்திக்க நேரிட்டது பிரேசில்.

39 வயதான வீரா் டேனி ஆல்வ்ஸ் களமிறக்கப்பட்டாா். இளம் வீரா் கேப்ரியல் மாா்ட்நெல்லி அடிக்கடி கேமரூன் கோல் பகுதியை முற்றுகையிட்டாா்.

14-ஆவது நிமிஷத்திலேயே அவா் கோலடிக்கும் அற்புத வாய்ப்பை தவற விட்டாா். அவரது முயற்சியை கேமரூன் கோல்கீப்பா் எபஸி முறியடித்தாா்.

முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இரண்டாம் பாதியிலும் ஆட்டத்தின் கடைசி வரை இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலன் தரவில்லை. 92-ஆவது நிமிஷத்தில் கேமரூன் வீரா் வின்சென்ட் அபுபக்கா் சக வீரா் ஜெரோம் கோம் அனுப்பிய கிராஸ் பந்தை பயன்படுத்தி ஒரே கோலை அடித்தாா். அதுவே 1-0 என வெற்றி கோலாக மாறியது.

கோலடித்த மகிழ்ச்சியில் வின்சென்ட் தனது பனியனை கழற்றி கொண்டாடினாா். ஆனால் அவருக்கு நடுவா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.

போட்டியில் இருந்து வெளியேறினாலும், ஜாம்பவான் பிரேசிலை வீழ்த்திய மகிழ்ச்சியோடு நாடு திரும்புகிறது கேமரூன்.

பிரேசிலை வென்ற முதல் ஆப்பிரிக்க நாடு:

உலகக் கோப்பையில் கேமரூனை ஏற்கெனவே 7 முறை பிரேசில் வென்றுள்ளது. இப்போட்டியில் 1-0 என வென்றதின் மூலம் பிரேசிலை வென்ற முதல் நாடு என்ற சிறப்பைப் பெற்றது கேமரூன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com