ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ரூ. 17.50 கோடி ஐபிஎல் சம்பளம் பற்றி கேம்ரூன் கிரீன்

ஏலத்தில் என் பெயரைக் கொடுத்தேன். அது தானாக நடைபெற்றுள்ளது...

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:51 pm

DIN

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 17.50 கோடிக்கு மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டார் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீன். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்ஸிங் டே டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த டெஸ்டிலும் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மோசமாக பேட்டிங் செய்ததால் 67 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு கைல் வெரைனும் யான்செனும் ஜோடி சேர்ந்து சரிவை ஓரளவு தடுத்து நிறுத்தினார்கள். வெரைன் 52, யான்சென் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். தென்னாப்பிரிக்க அணி 68.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேம்ரூன் கிரீன் 5 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு கேம்ரூன் கிரீன் பேட்டியளித்ததாவது:

ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வாக நான் ஒன்றும் செய்யவில்லை. ஏலத்தில் என் பெயரைக் கொடுத்தேன். அது தானாக நடைபெற்றுள்ளது. நான் எப்படிப்பட்டவன், என்ன மாதிரி சிந்திக்கிறேன், என் நம்பிக்கை என எதையும் ஐபிஎல் சம்பளம் மாற்றிவிடாது. ஏலம் முடிந்த பிறகு அணி வீரர்களின் உதவியுடன் டெஸ்ட் ஆட்டத்தில் கவனம் செலுத்தினேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.