ஆஸி. ஒருநாள் அணி அறிவிப்பு: பாகிஸ்தானுக்குச் செல்லாத பிரபல வீரர்கள்

மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி.
கேப்டன் ஃபிஞ்ச்
கேப்டன் ஃபிஞ்ச்

பாகிஸ்தானில் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. 

இந்நிலையில் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் பிரபல வீரர்களான டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு டி20 ஆட்டம் என்பதால் மேத்யூ வேட் அணியில் இடம்பெறவில்லை. திருமணம் காரணமாக மேக்ஸ்வெல்லும் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. 2018-க்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் டிராவிஸ் ஹெட் மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

பாகிஸ்தானுக்குச் செல்லும் ஆஸ்திரேலிய வீரர்களில் அபாட், எல்லீஸ், பெஹண்டார்ஃப், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் ஐபிஎல் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்கள்.

ஒருநாள், டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி

ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ், சீன் அபாட், ஆஷ்டன் அகர், ஜேசன் பெஹன்டார்ஃப், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லீஸ், கேம்ரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், பென் மெக்டர்மாட், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com