திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சஞ்சு சாம்சனின் பெயர் பரிசீலனையில் உள்ளது: உலகக் கோப்பை அணி பற்றி ரோஹித் சர்மா

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 9:17 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் பிப்ரவரி 24 முதல் தொடங்குகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் விளையாடியபோது சூர்யகுமார் யாதவுக்கும் தீபக் சஹாருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்கள். இத்தகவலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்திய அணியில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஞ்சு சாம்சன் பற்றி செய்தியாளர்களிடம் ரோஹித் சர்மா கூறியதாவது:

சஞ்சு சாம்சனிடம் அபாரமான திறமை உள்ளது. ஐபிஎல்-லில் அவருடைய சில ஆட்டங்கள் பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளன. வெற்றியடைவதற்கான திறமைகள் அவரிடம் உள்ளன. பலரிடமும் திறமை உள்ளது. அதை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம். தன்னுடைய திறமையை எப்படிப் பயன்படுத்தப் போகிறார், எப்படி அதிகப்படுத்தப் போகிறார் என்பது சஞ்சு சாம்சனின் கையில் தான் உள்ளது. அவரிடம் ஏராளமான திறமைகள் உள்ளதாக அணி நிர்வாகம் பார்க்கிறது. எங்களிடம் விளையாடும்போது அவருக்கு நம்பிக்கையைத் தருவோம். உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் அவருடைய பெயரும் பரிசீலனையில் உள்ளது. அதனால் தான் அணியில் இடம்பிடித்துள்ளார். பேக்ஃபுட் ஷாட், பிக் அப் புல், கட் ஷாட் என அவரிடம் அபாரமான பேட்டிங் திறமை உள்ளது. பந்துவீச்சாளருக்கு மேலே ஷாட் அடிப்பார், அதெல்லாம் அடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஆஸ்திரேலியாவில் அதுபோன்ற ஷாட்கள் அவசியம். சஞ்சு சாம்சனிடம் அவ்வகை ஷாட்கள் உள்ளன. அவர் தன் திறமையை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.