இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணையும் இந்திய முன்னாள் வீரர்

தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 5:28 am

DIN


தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

44 வயது அகர்கர், இந்திய அணிக்காக 1998 முதல் 2007 வரை 26 டெஸ்டுகள், 191 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டுகளில் 58 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 288 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராகத் தற்போது பணியாற்றி வரும் அஜித் அகர்கர், ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த வருடம் தில்லி அணியில் பணியாற்றிய முகமது கைஃப், அஜய் ராத்ரா ஆகியோரின் ஒப்பந்தங்கள் இம்முறை புதுப்பிக்கப்படவில்லை. இதையடுத்து அஜித் அகர்கர், தில்லி அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார். அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றுகிறார். 

இலங்கை அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தில் தொலைக்காட்சி வர்ணனையாளராகப் பணியாற்றவுள்ள அஜித் அகர்கர், மார்ச் 16-க்குப் பிறகு தில்லி அணியின் வலைப்பயிற்சி முகாமில் இணைந்துகொள்வார். 2013-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அகர்கர், முதல்முறையாகப் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.