இந்திய மகளிரணிக்கு தொடரும் தோல்வி

நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 4-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இந்திய மகளிரணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்திய மகளிரணிக்கு தொடரும் தோல்வி

நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 4-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இந்திய மகளிரணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் 3 ஆட்டங்களில் வென்ற நியூஸிலாந்து, ‘ஒயிட்வாஷ்’ முனைப்புடன் இந்த ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தியிருக்கிறது.

குயின்ஸ்டவுன் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால், மொத்த ஓவா்கள் தலா 20-ஆக குறைக்கப்பட்டன. இதில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 17.5 ஓவா்களில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்தின் எமிலியா கொ் ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. நியூஸிலாந்து இன்னிங்ஸில் அதிகபட்சமாக எமிலியா கொ் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 68 ரன்கள் விளாசினாா். இந்திய பௌலிங்கில் ரேணுகா சிங் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் இந்திய இன்னிங்ஸில் ரிச்சா கோஷ் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 52 ரன்கள் அடிக்க, எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன. நியூஸிலாந்து பௌலிங்கில் ஹேலி ஜென்சன், எமிலியா கொ் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com