பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து விலகிய லியோனல் மெஸ்ஸி, பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் இணைந்தார். சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர் (Ballon d'Or) விருதை 7-வது முறையாக மெஸ்ஸி சமீபத்தில் வென்றார்.
இந்நிலையில் கரோனாவால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டார் மெஸ்ஸி. இதனால் ஜனவரி 4 அன்று நடைபெற்ற பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் அணியின் ஆட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் மெஸ்ஸி உடல்நிலை பற்றிய சமீபத்திய தகவலை பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப் அறிவித்துள்ளது.
பரிசோதனையில் மெஸ்ஸிக்கு கரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. பாரிஸுக்கு அவர் வந்துவிட்டார். சில நாள்களில் அணியினருடன் இணைந்துவிடுவார் என்று பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


