தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கங்குலி, டிராவிட் உலகக் கோப்பையை வென்றதில்லை: ரவி சாஸ்திரி

முதல் உலகக் கோப்பையை வெல்ல சச்சின் டெண்டுல்கர் 6 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாட வேண்டியிருந்தது...

News image
Updated On :25 ஜனவரி 2022, 6:48 am

DIN

ஒரு வீரரின் திறமையை உலகக் கோப்பையின் முடிவுகளைக் கண்டு மதிப்பிடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள்  பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோற்றது. இதையடுத்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி. 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள்  பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

முக்கிய வீரர்களான கங்குலி, டிராவிட், அனில் கும்ப்ளே, லக்‌ஷ்மண், ரோஹித் சர்மா ஆகியோர் இதுவரை உலகக் கோப்பைப் போட்டியை வென்றதில்லை. இதற்காக அவர்கள் மோசமான வீரர்கள் என்று அர்த்தமில்லை. கபில் தேவ், தோனி என உலகக் கோப்பையை வென்ற இரு கேப்டன்கள் தான் நம்மிடம் உள்ளார்கள். முதல் உலகக் கோப்பையை வெல்ல சச்சின் டெண்டுல்கர் 6 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாட வேண்டியிருந்தது. உலகக் கோப்பையைக் கொண்டு ஒரு வீரரை மதிப்பிடக் கூடாது. எப்படி விளையாடுகிறார், எவ்வளவு காலம், எந்த முறையில் விளையாடுகிறார் என்பதை வைத்தே ஒரு வீரரை மதிப்பிட வேண்டும் என்றார். 

சாஸ்திரி தனது பேட்டியில் ரோஹித் சர்மாவின் பெயரைக் குறிப்பிட்டாலும் அவர் 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெற்று 4 ஆட்டங்களில் விளையாடினார். இறுதிச்சுற்று ஆட்டத்தில் 16 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரோஹித் சர்மா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.