ஷஃபாலி வர்மா நெ. 1 டி20 வீராங்கனை
கடைசியாக விளையாடிய 6 சர்வதேச டி20 ஆட்டங்களில் ஒருமுறை மட்டுமே 18 ரன்களைத் தாண்டினார் ஷஃபாலி வர்மா.


ஐசிசி மகளிர் பேட்டர்களுக்கான டி20 தரவரிசையில் இந்தியாவின் ஷஃபாலி வர்மா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி, டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஷஃபாலி வர்மாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார். 2020 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் ஹரியாணாவைச் சேர்ந்த 17 வயது ஷஃபாலி வர்மா.
இந்நிலையில் டி20 தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் ஷஃபாலி வர்மா. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறாத பெத் மூனியை விடவும் இரு புள்ளிகள் கூடுதலாகப் பெற்று நெ.1 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
எனினும் கடைசியாக விளையாடிய 6 சர்வதேச டி20 ஆட்டங்களில் ஒருமுறை மட்டுமே 18 ரன்களைத் தாண்டினார் ஷஃபாலி வர்மா. நான்கு முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...