டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மே.இ. தீவுகள் தொடருக்கு முன்பு மொட்டை அடித்துக்கொண்ட வாஷிங்டன் சுந்தர்

புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து, சும்மா அதிருதில்லை என எழுதியுள்ளார். 

News image
Updated On :29 ஜனவரி 2022, 11:06 am

DIN

தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக 4 டெஸ்ட், 1 ஒருநாள், 31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராகக் கடந்த மார்ச் மாதம் விளையாடினார். பிறகு காயம் காரணமாக அவரால் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை. தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி பங்கேற்ற ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் முதலில் சேர்க்கப்பட்டார். பிறகு கரோனா பாதிப்பால் அவரால் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்ல முடியவில்லை.

இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கான ஒருநாள், டி20 இந்திய அணிகளில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். 

இந்நிலையில் மே.இ. தீவுகள் தொடருக்கு முன்பு மொட்டை அடித்துக்கொண்டுள்ளார் வாஷிங்டன் சுந்தர். மொட்டையுடன் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து, சும்மா அதிருதில்லை என எழுதியுள்ளார். 

சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் விஜய் ஹசாரே போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர், 148 ரன்களும் 16 விக்கெட்டுகளும் எடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.