செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய செஸ் அணியின் ஆலோசகராகப் பிரபல வீரர் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி, செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெறுகிறது. 12 வருடங்கள் கழித்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் செஸ் மீண்டும் இடம்பெறுகிறது. 2020 போட்டியில் இந்திய அணி இரு வெண்கலப் பதக்கங்களை வென்றது. 2006 தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இரு தங்கங்களை வென்றது.
செஸ் விளையாட்டில் நான்கு தங்கங்களை வெல்ல வாய்ப்புள்ளதால் அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது அகில இந்திய செஸ் சம்மேளனம். ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக முதற்கட்ட இந்திய செஸ் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சர்வதேசத் தரவரிசைப்படி ஆடவர், மகளிர் பிரிவில் தலா 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தலா 5 வீரர்களைக் கொண்ட இறுதிப் பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும்.
இந்திய அணிக்கான ஆலோசகராகப் பிரபல வீரர் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 3 முதல் அனைத்து வீரர்களுக்கும் ஆனந்த் பயிற்சியளிக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


