யு19 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்தியா

19 வயதுக்குள்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
படம்: ட்விட்டர்
படம்: ட்விட்டர்


19 வயதுக்குள்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை நேற்று (சனிக்கிழமை) எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீச வங்கதேச அணி 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக ரவி குமார் 3 விக்கெட்டுகளையும், விக்கி ஓஸ்ட்வால் 2 விக்கெட்டுகளையும், ராஜவர்தன் ஹங்கர்கேர், கௌசல் தாம்பே, அன்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

112 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், வங்கதேசப் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகப் பந்துவீசினர். ஹர்னூர் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

அன்க்ரிஷ் ரகுவன்ஷி மற்றும் ஷைக் ரஷீத் 2-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து விளையாடினர். இதன்பிறகு, இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரகுவன்ஷி (44), ரஷீத் (26), சித்தார்த் யாதவ் (6), ராஜ் பவா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

எனினும், கேப்டன் யாஷ் துல் மற்றும் கௌசல் தாம்பே இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். 30.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com