தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மே.இ. தீவுகள் ஒருநாள் தொடர்: புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

மே.இ. தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 22 அன்று தொடங்கி ஜூலை 27 அன்று நிறைவடைகிறது. 

News image
அக்‌ஷர் படேல், ருதுராஜ்
Updated On :6 ஜூலை 2022, 10:34 am

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடருக்குப் பிறகு இங்கிலாந்தில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் ஜூலை 17 அன்று நிறைவடைகிறது. இதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. மே.இ. தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 22 அன்று தொடங்கி ஜூலை 27 அன்று நிறைவடைகிறது. 

ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெயிக்வாட், ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், சிராஜ், அர்ஷ்தீப் சிங் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். துணை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ரிஷப் பந்த், பாண்டியா, ஷமி ஆகியோருக்கு இத்தொடரில் விளையாடுவதிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஒருநாள் அணி

ஷிகர் தவன் (கேப்டன்), ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், சஹால், அக்‌ஷர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.