உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி, மகளிர் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஈட்டி எறிதல் விளையாட்டின் தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. ஈட்டி எறிதலில் தேசிய சாதனை நிகழ்த்தியுள்ள இந்தியாவின் அன்னு ராணி, தனது கடைசி வாய்ப்பில் 59.60 மீ. தூரம் ஈட்டியை எறிந்தார். இதனால் 8-ம் இடம் பிடித்த அன்னு ராணி, முதல் எட்டு இடங்களைப் பிடித்த வீராங்கனைகளில் ஒருவராக இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்தார்.
2019-ல் தோஹாவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற அன்னு ராணி, 8-ம் இடம் பிடித்தார். சமீபத்தில் 63.82 மீ. தூரம் எறிந்து தேசிய சாதனை நிகழ்த்திய அன்னு ராணி, இறுதிச்சுற்றில் இன்னும் சிறப்பாகத் தனது திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
நாளை (வெள்ளி) ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கிறார். இந்திய நேரம் காலை 5.35 மணிக்குப் போட்டி தொடங்கவுள்ளது.
கார்ல்சன் விலகல்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மோதப்போவது யார்?
விராட் கோலியைக் கொண்ட இந்தியாவைப் பார்த்து எதிரணி பயப்படும்: பாண்டிங்
‘கருப்பு வெள்ளை’ நேப்பியர் பாலத்தை நேரில் கண்டுகளித்த பிரக்ஞானந்தா (படங்கள்)
லார்ட்ஸில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்த புஜாரா
இந்தியா - மே.இ. தீவுகள் தொடர்: எந்த ஓடிடி, தொலைக்காட்சியில் பார்க்க முடியும்? முழு விவரங்கள்!