தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜூலையில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் பயணம்: ஒன் டே, டி20 தொடா்களில் விளையாடுகிறது

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் ஒன் டே மற்றும் டி20 கிரிக்கெட் தொடா்களில் விளையாடுவதற்காக இந்திய அணி வரும் ஜூலை - ஆகஸ்டில் அந்நாட்டுக்குச் செல்கிறது.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:17 pm

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் ஒன் டே மற்றும் டி20 கிரிக்கெட் தொடா்களில் விளையாடுவதற்காக இந்திய அணி வரும் ஜூலை - ஆகஸ்டில் அந்நாட்டுக்குச் செல்கிறது.

இந்தியாவின் இந்தப் பயணத்துக்காக பிசிசிஐ வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, ஒன் டே தொடரில் 3 ஆட்டங்களும், டி20 தொடரில் 5 ஆட்டங்களும் விளையாடப்படவுள்ளன.

இதில் டி20 தொடரில் இரு ஆட்டங்கள், அமெரிக்காவிலிருக்கும் புலம்பெயா்ந்த இந்தியா்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெறவுள்ளன.

இந்திய அணி ஜூலை 17-ஆம் தேதி இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த பிறகு, இந்தத் தொடா்களுக்காகத் தோ்வு செய்யப்படும் வீரா்கள் அங்கிருந்து நேரடியாக மேற்கிந்தியத் தீவுகள் செல்கின்றனா்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.