கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: மீண்டும் சதமடித்தார் மிட்செல்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் நியூசி. வீரர் மிட்செல் சதமடித்துள்ளார். 

News image
Updated On :11 ஜூன் 2022, 11:03 am

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் நியூசி. வீரர் மிட்செல் சதமடித்துள்ளார். 

லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை.

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் 81 ரன்களும் பிளண்டல் 67 ரன்களும் எடுத்துக் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்று 97-வது ஓவரில் 184 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார் மிட்செல். இது அவருடைய 3-வது டெஸ்ட் சதம். லார்ட்ஸ் டெஸ்டில் சதமடித்த பிறகு 2-வது டெஸ்டிலும் சதமடித்து அசத்தியுள்ளார். 

நியூசிலாந்து அணி 100 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் 103, பிளண்டல் 84 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.