எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

குட்டி யுவராஜ் சிங் பெயர் தெரியுமா? 

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்-ஹேசல் கீச் தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஓரியன் கீச் சிங் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

News image
Updated On :19 ஜூன் 2022, 2:54 pm

DIN

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்-ஹேசல் கீச் தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஓரியன் கீச் சிங் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். இவருக்கும் நடிகையுமான ஹேசல் கீச்சிற்கும் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி ஃபதேகர் சாஹிப் குருத்வாராவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது இந்த குழந்தைக்கு ஓரியன் கீச் சிங் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தந்தையர் நாளை முன்னிட்டு யுவராஜ் சிங் இதனை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய ஆல் ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங்.

பின்னர் இவர் 2019-ஆம் ஆண்டு அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.