திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கடைசி டி20 : மழையால் தாமதமாகும் ஆட்டம்

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2022, 7:28 pm IST

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இரவு 7 மணிக்குத் தொடங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டித் தொடங்க தாமதமாகிறது.

முன்னதாக, டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

இந்தப் போட்டியில் ரிஷப் பந்த தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது.

தென்னாப்பிரிக்காவில் கேப்டன் டெம்பா பவுமா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க அணியினை சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் வழிநடத்துகிறார். அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக டாஸின் போது அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.