20 வருட அனுபவத்தில் இப்படிப் பார்த்ததே இல்லை: ஆண்டர்சன்

புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் தலைமையில் விளையாடும் இங்கிலாந்து அணி தனக்கு ஆச்சர்யம் தருவதாக...
20 வருட அனுபவத்தில் இப்படிப் பார்த்ததே இல்லை: ஆண்டர்சன்


புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் தலைமையில் விளையாடும் இங்கிலாந்து அணி தனக்கு ஆச்சர்யம் தருவதாக 39 வயது வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் விளையாடுகிறது.

புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ், புதிய பயிற்சியாளர் மெக்கல்லம் தலைமையில் விளையாடும் இங்கிலாந்து அணி பற்றி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது:

சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் நாங்கள் 300 ரன்களை விரட்டும்போது (2-வது டெஸ்டில் 50 ஓவர்களில் 299 ரன்களை விரட்டி வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி) ஓய்வறை மிகவும் அமைதியாக, இலக்கை விரட்டி விடுவோம் என்கிற நம்பிக்கையுடன் இருந்தது. இப்படியொரு ஓய்வறையில் நான் இருந்ததே இல்லை. 20 வருடங்களாகச் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் நான் இதுபோன்று பார்த்ததே இல்லை. எப்போதும் பதற்றப்படும் சில வீரர்கள் இருப்பார்கள். ஆனால் 11 வீரர்களும் பயிற்சியாளர்களும் நிதானமாகவும் நம்பிக்கையுடனும் இருந்தார்கள். அணியில் உள்ள இளம் வீரர்களைப் பார்க்கும்போது இந்த நம்பிக்கை, இங்கிலாந்து அணியை நீண்ட தூரத்துக்கு அழைத்துச் செல்லும். அந்த வீரர்களிடையே ஏற்படும் நம்பிக்கை பல சாதனைகளை நிகழ்த்தும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com