ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வார்னேவுக்கு மெளன அஞ்சலி செலுத்திய இந்திய, இலங்கை வீரர்கள்

ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணி வீரர்களும் வார்னேவின் மறைவுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:35 am

DIN

மாரடைப்பால் நேற்று மறைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் வார்னேவுக்கு மொஹலியில் இந்திய, இலங்கை வீரர்கள் மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்டுகளில் விளையாடிய 708 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்கியவர் ஷேன் வார்னே. இந்நிலையில் நண்பர்களுடன் தாய்லாந்து சென்ற வார்னே, எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார். தாய்லாந்தில் உள்ள சுற்றுலா தீவுகளில் ஒன்றான கோ சாமுயில் உள்ள அவரது அறையில் வாா்னே சுயநினைவின்றி மீட்கப்பட்டதாகவும், மருத்துவா்களின் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்ததாகவும் வாா்னே தரப்பு நிா்வாகத்தின் சாா்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. வார்னேவின் திடீர் மறைவு கிரிக்கெட் உலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைச் செய்தது. கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் வார்னே குறித்த தங்கள் நினைவுகளைச் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று கிரிக்கெட் ஆட்டம் நடைபெறும் அனைத்து இடங்களிலும் வார்னேவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மொஹலியில் நடைபெறும் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் 2-வது நாளில் ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணி வீரர்களும் ஆஸி. முன்னாள் வீரர்கள் ராட் மார்ஷ், வார்னே ஆகியோரின் மறைவுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அனைத்து வீரர்களும் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.