இந்திய இளம் வீரர் லக்ஷயா சென், பாட்மிண்டன் தரவரிசையில் 9-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பிர்மிங்கமில் சமீபத்தில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் டென்மார்க்கைச் சேர்ந்த உலகின் நெ.1 வீரர் விக்டர் அக்ஸல்சென்னிடம் மோதினார் லக்ஷயா சென். 21-10, 21-15 என எளிதான முறையில் வென்று 2-வது முறையாக ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் பட்டத்தை வென்றார் விக்டர். இருவரும் இதுவரை மோதிய ஆட்டங்களில் 5-ல் விக்டரும் ஓர் ஆட்டத்தில் லக்ஷயாவும் வென்றுள்ளார்கள். 21 வருடங்களுக்கு முன்பு ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியை வென்றார் இந்தியாவின் கோபிசந்த். அதற்குப் பிறகு மீண்டும் இன்னொரு இந்தியர் பட்டம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார்கள் ரசிகர்கள். ஆல் இங்கிலாந்து இறுதிச்சுற்றில் பங்கேற்ற 4-வது வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் 20 வயது லக்ஷயா சென்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட பாட்மிண்டன் தரவரிசையில் 9-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் லக்ஷயா சென். முதல்முறையாக முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணியில் உள்ள இந்திய வீரர் இவர் தான். ஸ்ரீகாந்த் 12-ம் இடத்திலும் சார் பிரணீத் 19-ம் இடத்திலும் உள்ளார்கள். இந்தியா ஓபன் போட்டியை வென்ற லக்ஷயா சென், ஜெர்மன் ஓபன் மற்றும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2-ம் இடத்தைப் பிடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிகக் கப்பல்களில் பணிபுரியச் செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுரை!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பலி

லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



