தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா தோற்றபோது நடந்தது என்ன?: ஐசிசி வெளியிட்ட காணொளி

இந்திய அணி தோற்றபோது மைதானத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் இந்திய அணியின் தோல்வியை...

News image

இந்திய அணி (கோப்புப் படம்)

Updated On :28 மார்ச் 2022, 10:51 am

DIN

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. இதனால், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து, போட்டியிலிருந்து வெளியேறியது இந்தியா. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. 

இந்தியா, 7 ஆட்டங்களில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 5-ம் இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதியில் ஆடவுள்ளன. 

வென்றே தீர வேண்டிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா அதே ஓவர்களில் அதே 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் அடித்து வென்றது. கடைசிப் பந்தில் ஆட்டத்தின் முடிவு எட்டப்பட்டதால் இந்தியாவின் வெற்றியை எதிர்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். 

இந்திய அணி தோற்றபோது மைதானத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் இந்திய அணியின் தோல்வியை மேற்கிந்தியத் தீவுகளின் வீராங்கனைகள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பதையும் காணொளியாக வெளியிட்டுள்ளது ஐசிசி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.