பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஷதாப் கான், இஃப்திகார் திடீர் அதிரடி: தெ..ஆ. அணிக்கு எதிராக 185 ரன்கள் குவித்த பாகிஸ்தான்

20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி. 

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:06 am

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி. 

சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 3 ஆட்டங்களில் 2 புள்ளிகளைக் கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி மீதமுள்ள இரு ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் வென்றாலே அரையிறுதி உறுதியாகி விடும். காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. 

முதல் ஓவரில் 4 ரன்களுக்கு ரிஸ்வானை வீழ்த்தினார் பார்னெல். இதற்குப் பிறகு முகமது ஹாரிஸ் களமிறங்கினார். காயம் காரணமாகப் பிரபல வீரர் ஃபகார் ஸமான் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக முகமது ஹாரிஸ் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார். இது அவருடைய 2-வது டி20 ஆட்டம். 4 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 

ரபாடா வீசிய 2-வது ஓவரில் இரு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்து அசத்தினார் முகமது ஹாரிஸ். இதற்குப் பிறகு மற்றொரு பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து 11 பந்துகளில் 28 ரன்களுடன் நோர்கியா பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு ரபாடா அற்புதமாக கேட்ச் பிடித்து கேப்டன் பாபர் ஆஸமை 6 ரன்களுக்கு வெளியேற்றினார். முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். அடுத்த ஓவரில் ஷான் மசூத் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முகமது நவாஸ் 22 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 13-வது ஓவரின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து சற்று தடுமாறியது பாகிஸ்தான். 

ஷதாப் கான்

ஷதாப் கான்

6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷதாப் கானும் இஃப்திகாரும் நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். சிக்ஸர் மழை பொழிந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தக் கூட்டணி 6 ஓவர்களில் 82 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. 

22 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஷதாப் கான். 20 பந்துகளில் அரை சதமெடுத்து பெரிய திருப்புமுனையை அவர் ஏற்படுத்தினார். 33 பந்துகளில் அரை சதமெடுத்த இஃப்திகார் கூடுதலாக ஒரு ரன் சேர்த்துக் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி 8 பந்துகளில்  4 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான். 

20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி. இந்தக் கடினமான இலக்கை தென்னாப்பிரிக்க அணி வெற்றிகரமாக எதிர்கொண்டால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.