தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாகிஸ்தான் வீரரைப் பாராட்டிய அஸ்வின்!

டி20 உலகக் கோப்பையில் களமிறங்கிய பாகிஸ்தான் வீரரைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார்...

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:43 am

DIN

டி20 உலகக் கோப்பையில் களமிறங்கிய பாகிஸ்தான் வீரரைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார் பிரபல இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின்.

சிட்னியில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 3 ஆட்டங்களில் 2 புள்ளிகளைக் கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி மீதமுள்ள இரு ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் வென்றாலே அரையிறுதி உறுதியாகி விடும். காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. 

முதல் ஓவரில் 4 ரன்களுக்கு ரிஸ்வானை வீழ்த்தினார் பார்னெல். இதற்குப் பிறகு முகமது ஹாரிஸ் களமிறங்கினார். காயம் காரணமாகப் பிரபல வீரர் ஃபகார் ஸமான் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக முகமது ஹாரிஸ் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார். இது அவருடைய 2-வது டி20 ஆட்டம். 4 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 

ரபாடா வீசிய 2-வது ஓவரில் இரு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்து அசத்தினார் முகமது ஹாரிஸ். இதற்குப் பிறகு மற்றொரு பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து 11 பந்துகளில் 28 ரன்களுடன் நோர்கியா பந்தில் ஆட்டமிழந்தார். 

முதல் 5 பந்துகளில் 2 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் 21 வயது முகமது ஹாரிஸ் அடித்தபோது அவரைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டார் இந்திய வீரர் ஆர். அஸ்வின்.     

5 பந்துகளில் தான் விளையாடியுள்ளார். இந்த ஹாரிஸ் அபாரம் எனப் பாராட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.