மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டி20 உலகக் கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து முதலில் பேட்டிங்

அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது நியூசிலாந்து அணி.

News image
நியூசிலாந்து அணி
Updated On :9 நவம்பர் 2022, 7:46 am

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது நியூசிலாந்து அணி.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி. அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று, சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. நாளை (வியாழன்) அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளிலும் மாற்றம் எதுவுமில்லை. இந்த டி20 உலகக் கோப்பையில் சிட்னியில் முதலில் பேட்டிங் செய்த 6 அணிகளில் 5 அணிகளுக்கு வெற்றிகள் கிடைத்துள்ளன. இன்று மழை அறிகுறி எதுவும் இல்லாததால் பரபரப்பான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.