தினேஷ் கார்த்திக்கா, ரிஷப் பந்தா?: ரோஹித் சர்மா பதில்

தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் ஆகிய இருவரில் யாரைத் தேர்வு செய்வீர்கள்...
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்

தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் ஆகிய இருவரில் யாரைத் தேர்வு செய்வீர்கள் என்கிற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி. அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று, சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. நாளை (வியாழன்) அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் அரையிறுதி ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரில், நான் முன்பே கூறியது போல, இந்தப் போட்டியில் ரிஷப் பந்துக்கு மட்டும் தான் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார். அதற்குப் பிறகு அவர் விளையாடவில்லை. அதனால் தான் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வைத்தோம். அதற்குக் காரணம், அரையிறுதி அல்லது இறுதிச்சுற்றில் அவர் விளையாடுவதாக இருந்தால் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். திடீரென ஒரு வீரரை முக்கியமான ஆட்டத்தில் விளையாட வைக்க முடியாது. அரையிறுதியில் நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க ரிஷப் பந்த் உதவுவார். எனவே தான் முந்தைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பளித்தோம். அதேசமயம், அரையிறுதிக்கான இந்திய அணித் தேர்வில் என்ன முடிவெடுப்போம் எனத் தெரியாது. இரு விக்கெட் கீப்பர்களும் தேர்வுக்கான போட்டியில் உள்ளார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com