டி20 தரவரிசை: முதலிடம் பிடித்த இலங்கை பந்துவீச்சாளர்!
By DIN | Published On : 09th November 2022 12:41 PM | Last Updated : 09th November 2022 12:41 PM | அ+அ அ- |

பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி டி20 தரவரிசையில் இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா முதலிடம் பிடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய 8 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் இலங்கை சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்கா. இதையடுத்து பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ரஷித் கானைப் பின்னுக்குத் தள்ளி ஹசரங்கா முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பு நவம்பர் 2021-ல் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ஹசரங்கா.
முதல் 10 வீரர்களில் எந்தவொரு இந்தியப் பந்துவீச்சாளருக்கும் இடம் கிடைக்கவில்லை. புவனேஸ்வர் குமார் 12-வது இடத்திலும் அஸ்வின் 13-வது இடத்திலும் உள்ளார்கள். அர்ஷ்தீப் சிங் 23-வது இடத்தில் உள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...