ஆறு வருடங்களில் இப்படி உணர்ந்ததில்லை: ஸ்டீவ் ஸ்மித்
கடந்த ஆறு வருடங்களில் இப்படி உணர்ந்ததில்லை என ஆஸி. பேட்டர் ஸ்மித் கூறியுள்ளார்.


கடந்த ஆறு வருடங்களில் இப்படி உணர்ந்ததில்லை என ஆஸி. பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. டி20 உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை அபாரமாக விரட்டியது ஆஸ்திரேலிய அணி. வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்மித் ஆகிய முதல் மூன்று பேட்டர்களும் அரை சதமெடுத்தார்கள். வார்னர் 86 ரன்களும் ஹெட் 69 ரன்களும் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 80 ரன்களும் எடுத்ததால் 46.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்து பேட்டர் மலான் வென்றார்.
இந்நிலையில் தன்னுடைய பேட்டிங் பற்றி பிரபல ஆஸி. பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:
கடந்த 6 வருடங்களில் இப்போதுதான் நன்றாக விளையாடுகிறேன். கடந்த 6 வருடங்களில் இப்படி உணர்ந்ததில்லை. ரன்கள் எடுப்பது நல்ல விஷயம். துல்லியத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இப்போது துல்லியத்துக்கு அருகில் வந்துவிட்டோம். கடந்த ஒரு வருடங்களாக சில விஷயங்களில் கவனம் செலுத்துகிறேன். முதல் ஒருநாள் ஆட்டத்தில் நீண்ட நேரம் களத்தில் இருந்து தான் ரன்கள் எடுத்தேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...