இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்த ஹெட், வார்னர்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்த ஹெட், வார்னர்
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. மெல்போர்னில் 3-வது ஒருநாள் ஆடம் நடைபெறுகிறது. இரு கேப்டன்களான பட்லர், கம்மின்ஸ் ஆகிய இருவரும் இந்த ஆட்டத்தில் இடம்பெற்றுள்ளார்கள். ஸ்டார்க், ஆஷ்டன் அகருக்குப் பதிலாக கம்மின்ஸ், ஷான் அபாட் ஆஸி. அணியில் இடம்பெற்றுள்ளார்கள். இங்கிலாந்து அணியில் அடில் ரஷித், மொயீன் அலிக்குப் பதிலாக பட்லர், ஸ்டோன் இடம்பெற்றுள்ளார்கள். மிகப்பெரிய மெல்போர்ன் மைதானத்தில் மிகக்குறைவான ரசிகர்களே இந்த ஆட்டத்தைக் காண வந்துள்ளார்கள்.

தொடக்க வீரர்களான வார்னரும் ஹெட்டும் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினார்கள். 10 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்தார்கள். 20-வது ஓவரின்போது ஒருமுறையும் 43-வது ஓவரின்போது இன்னொரு முறையும் மழை குறுக்கிட்டதால் இரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 48 ஓவர்களுக்கு ஆட்டம் நடைபெற்றது. 25 ஓவர்களின் முடிவில் 161 ரன்களாக ஸ்கோர் உயர்ந்தது. ஹெட் 91 பந்துகளில் சதமடித்தார். வார்னர் சதமடிக்க 97 பந்துகள் தேவைப்பட்டன. ஸ்டோன் வீசிய 39-வது ஓவரில் வார்னர் 106 ரன்களுக்கும் ஹெட் 151 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். மிட்செல் மார்ஷ் 16 பந்துகளில் 30 ரன்களுக்கும் ஸ்மித் 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். ஆஸ்திரேலிய அணி 48 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்தது. ஸ்டோன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிஎல்எஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 48 ஓவர்களில் 364 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com