தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆஸ்திரேலியாவில் தனது முதல் வலை பயிற்சிக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் என்ன கூறினார் தெரியுமா?

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலியாவில் தனது முதல் வலைபயிற்சியை நிறைவு செய்துள்ளார்.

News image
Updated On :9 அக்டோபர் 2022, 2:41 pm

DIN

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலியாவில் தனது முதல் வலைபயிற்சியை நிறைவு செய்துள்ளார்.

இந்திய அணியில் வளர்ந்து வரும் பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர் சூர்யகுமார் யாதவ். அவரது அதிரடியான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை கொடுத்து வருகிறது. இன்று அவர் இந்திய அணியின் நட்சத்திர வீரராக மாறியுள்ளார். சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாகி சிறிது காலத்திலேயே தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான அவர் குறுகிய காலத்தில் ஐசிசி சிறந்த பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார். அண்மையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது. இந்நிலையில், தற்போது பிசிசிஐ விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த விடியோவில் ஆஸ்திரேலிய மைதானத்தில் தனது முதல் வலைபயிற்சியை மேற்கொண்ட சூர்யகுமார் யாதவ் பேசியதாவது: “ நான் ஆஸ்திரேலிய மைதானத்தில் எனது முதல் வலை பயிற்சியை எதிர்பார்த்து காத்திருந்தேன். தற்போது எனது முதல் வலை பயிற்சியை முடித்துள்ளேன். உண்மையில் எனது முதல் வலை பயிற்சி சிறப்பாக இருந்தது. இனி மைதானத்தின் தன்மைகளை ஆராய்ந்து அதற்கேற்ப என்னுடைய ஆட்டத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் எனது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கிறது. நிறைய ஆவலுடன் உலகக் கோப்பைப் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.