தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இந்திய பயனர்களின் தரவுகளைத் திருடும் 'ஜிபி வாட்ஸ்ஆப்'

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் போன்று பிளே ஸ்டோரிலுள்ள ஜிபி வாட்ஸ்ஆப் இந்திய பனர்களின் தரவுகளைத் திருடும் ஆபத்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
இந்திய பயனர்களின் தரவுகளைத் திருடும் 'ஜிபி வாட்ஸ்ஆப்'
Updated On :9 அக்டோபர் 2022, 10:31 am

DIN

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் போன்று பிளே ஸ்டோரிலுள்ள ஜிபி வாட்ஸ்ஆப் இந்திய பனர்களின் தரவுகளைத் திருடும் ஆபத்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஎஸ்இடி ஆண்டி வைரஸ் நிறுவனம் இந்த இந்தியர்களின் சாட்களை (Chats) ஜிபி வாட்ஸ்ஆப் திருடுவதாகக் குறிப்பிட்டுள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுக்க கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளது. அதேபோன்றே தோற்ற அமைப்புடனும் கூடுதல் அம்சங்களுடனும் ஜிபி வாட்ஸ்ஆப் என்ற செயலியும் உள்ளது. இதற்கான பயனர்களும் உலகம் முழுக்க உள்ளனர். ஜிபி வாட்ஸ்ஆப் செயலி கூகுள் நிறுவனத்தின் பிளேஸ்டோரில் கிடைப்பதில்லை. ஆனால் மற்ற தேடுபொறிகளின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

இந்நிலையில், ஜிபி வாட்ஸ்ஆப் செயலி இந்திய பயனர்களின் தரவுகளைத் திருடும் அபாயம் உள்ளதாக இஎஸ்இடி ஆண்டி வைரஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பயனர்களின் மெசேஜ்களை டேம்பரிங் செய்யவும் ஜிபி வாட்ஸ்ஆப் அனுமதிப்பதாக குறிப்பிட்டுள்ளது. 

ஜிபி வாட்ஸ்ஆப்-பில் கூடுதல் சிறப்பம்சங்கள் இருப்பதால், ஒருசில இந்திய பயனர்கள் ஜிபிவாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். அந்த கூடுதல் அம்சங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆப்களுக்கு தடையாக இல்லாததால், அவை பயனர்களிடையேயும் பயன்பாட்டில் உள்ளது. 

எனினும் அங்கீகரிக்கப்படாத குளோனிங் செயலிகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் தடை செய்து வருகிறது. அத்தகைய செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்ந்தால் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.