ஷமிக்குக் கடைசி ஓவரை மட்டும் வழங்கியது ஏன்?: ரோஹித் சர்மாவின் ஆச்சர்ய பதில்!
ஷமிக்குக் கடைசி ஓவரை மட்டும் வழங்கியது பற்றி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது...


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முகமது ஷமிக்குக் கடைசி ஓவர் மட்டும் வழங்கியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதியது இந்தியா. டாஸ் வென்ற ஆஸி. அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், அஸ்வின் இடம்பெற்றார்கள்.
கே.எல். ராகுல் 57, சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடித்து இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவிக்க உதவினார்கள். ரோஹித் சர்மா 15, கோலி 19, பாண்டியா 2, தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்தார்கள். கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸி. அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. பாண்டியா வீசிய 3-வது ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை அடித்தார்கள் ஆஸி. பேட்டர்கள். இதனால் 4.4 ஓவர்களிலேயே 50 ரன்களைத் தொட்டது ஆஸி. அணி. அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ், 18 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆஸி. அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது.
ஸ்மித் 11 ரன்கள், மேக்ஸ்வெல் 23 ரன்கள், ஸ்டாய்ன்ஸ் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். தொடக்க வீரர் ஃபிஞ்ச் இன்று அபாரமாக விளையாடி ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார். 40 பந்துகளில் அரை சதம் எட்டினார். மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடர்ந்து பவுண்டரிகளை அடித்து வந்தார். கடைசிக்கட்டத்தில் 79 ரன்களில் ஹர்ஷல் படேல் பந்தில் போல்ட் ஆனார். 19-வது ஓவரில் டிம் டேவிட்டை 5 ரன்களுக்கு ரன் அவுட் செய்தார் கோலி. 19-வது ஓவரில் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்ஷல் படேல். இதனால் கடைசி ஓவரில் ஆஸி. அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன.
யாரும் எதிர்பாராதவிதமாக கடைசி ஓவர் ஷமிக்கு வழங்கப்பட்டது. அதுதான் இன்றைய ஆட்டத்தில் அவர் வீசும் முதல் ஓவர். கம்மின்ஸ் சிக்ஸருக்கு அடிக்க முயன்றபோது கோலி எல்லைக்கோட்டுக்கு அருகே அற்புதமாக கேட்ச் பிடித்து 7 ரன்களில் அவரை வெளியேற்றினார். அடுத்தப் பந்தில் அஷ்டன் அகர் ரன் அவுட் ஆனார். அடுத்தப் பந்தில் இங்லிஷ் 1 ரன்னில் போல்ட் ஆனார். கடைசிப் பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்கிற நிலையில் கேன் ரிச்சர்ட்சனை போல்ட் செய்தார் ஷமி. கடைசி 4 பந்துகளிலும் விக்கெட்டுகள் வீழ்ந்தன. கடைசி 6 விக்கெட்டுகளை 9 ரன்களுக்கு இழந்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எதிர்பாராத விதமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 19-வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் 5 ரன்களும் கடைசி ஓவரை வீசிய ஷமி 4 ரன்களும் மட்டும் கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தார்கள்.
இந்நிலையில் ஷமிக்குக் கடைசி ஓவரை மட்டும் வழங்கியது பற்றி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
உண்மையில் நீண்ட நாளைக்குப் பிறகு விளையாட வந்துள்ளார் ஷமி. எனவே அவருக்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுக்க எண்ணினோம். ஆரம்பத்திலிருந்து அதுதான் திட்டமாக இருந்தது. ஷமி கடைசி ஓவர்களில் பந்துவீசுவார். புதிய பந்தில் அவர் எப்படி அபாரமாகப் பந்துவீசுவார் என்பதை நாங்கள் அறிவோம். நேராகக் கடைசி ஓவரில் பந்துவீசுவது போன்ற சிறு சவாலை அவருக்கு அளிக்க எண்ணினோம். அது எப்படி இருந்தது என்பதை அனைவரும் பார்த்தோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...