எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிலிப்ஸ் சதம்: இலங்கையை எளிதாக வீழ்த்திய நியூசிலாந்து!

இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது நியூசிலாந்து.

News image
போல்ட்
Updated On :29 அக்டோபர் 2022, 12:01 pm

DIN

இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது நியூசிலாந்து.

சிட்னியில் நியூசிலாந்து - இலங்கைக்கு இடையிலான இன்றைய ஆட்டம் மழை பாதிப்பு எதுவுமின்றி சரியான நேரத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்துக்கு முன்பு, நியூசிலாந்து அணி 2 ஆட்டங்களில் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் குரூப் 1 பிரிவில் முதலிடத்தில் இருந்தது. இலங்கை அணி 2 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் இருந்தது. 

நியூசிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரில் ஃபின் ஆலனை 1 ரன்னில் போல்ட் செய்தார் தீக்‌ஷனா. பிறகு கான்வே 1 ரன்னிலும் வில்லியம்சன் 8  ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் 4-வது ஓவரின் முடிவில் 15/3 என்கிற பரிதாபமான நிலையில் இருந்தது நியூசிலாந்து. இதன்பிறகு டேரில் மிட்செல்லும் கிளென் பிளிப்ஸும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். 

Story image

பிலிப்ஸ் 12 ரன்களில் இருந்தபோது அவர் வழங்கிய எளிதான கேட்சை நழுவ விட்டார் நிசங்கா. இதற்கு இலங்கை அணி பெரிய விலையைக் கொடுத்தது. 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 54 என்கிற பாதுகாப்பான நிலையில் இருந்தது நியூசிலாந்து. 13-வது ஓவர் வரைக்கும் மேலும் விக்கெட் எதுவும் விழாததால் அதிரடியாக விளையாட முடிவெடுத்தார் பிலிப்ஸ். 14-வது ஓவரில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் கிடைத்தன. டேரில் மிட்செல் 22 ரன்களுக்கு ஹசரங்கா பந்தில் ஆட்டமிழந்தார். இருவரும் 64 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்கள். பிறகு 61 பந்துகளில் சதமடித்து அசத்தினார் பிலிப்ஸ். கடைசியில் 64 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

இலங்கைக்கும் மோசமான தொடக்கமே அமைந்தது. 6.1 ஓவர்களில் 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன்பிறகு இலங்கை அணியால் மீண்டு வரவே முடியவில்லை. 19.2 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிலிப்ஸ் எடுத்த ரன்களை விடவும் குறைவான ரன்களே எடுத்தது இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. பனுகா 34 ரன்களும் கேப்டன் ஷனகா 35 ரன்களும் எடுத்தார்கள். டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிலிப்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.