ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

அயர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு அளித்த ஆஸ்திரேலியா!

அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2022, 11:51 am

DIN

அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வார்னர் 3 ரன்களிலும் மேக்ஸ்வெல் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். கேப்டன் ஃபிஞ்ச் 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார். மிட்செல் மார்ஷ் 28, ஸ்டாய்னிஸ் 35 ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்ததால் நல்ல ஸ்கோர் கிடைத்தது. அயர்லாந்து வீரர் மார்க் அடைர் இரு ஓவர்களில் 26, 17 என ரன்களை வாரி வழங்கியது அயர்லாந்துக்குப் பின்னடைவாக அமைந்தது. 

குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்களில் 3 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும் அயர்லாந்து அணி அதே 3 ஆட்டங்களில் 3 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி 2-ம் இடத்துக்கு முன்னேறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.