கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

யு.எஸ். ஓபன்: நடப்பு சாம்பியன் தோல்வி

யு.எஸ். ஓபன் போட்டியில் நடப்பு சாம்பியன் மெத்வதேவ் 4-வது சுற்றில் தோல்வியடைந்தார். 

News image
நிக் கிர்கியோஸ்
Updated On :5 செப்டம்பர் 2022, 11:07 am

DIN

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் மெத்வதேவ் 4-வது சுற்றில் தோல்வியடைந்தார். 

யு.எஸ். ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் எம்மா ரடுகானு முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் நடப்பு சாம்பியனான மெத்வதேவ் தற்போது தோல்வியடைந்துள்ளார். 

4-வது சுற்றில் நடப்பு சாம்பியன் மெத்வதேவும் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸும் மோதினார்கள். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்த ஆட்டத்தில் 7-6 (11), 3-6, 6-3, 6-2  என வென்று காலிறுதிக்குத் தகுதியடைந்தார் 27 வயது கிர்கியோஸ். இதன்மூலம் முதல்முறையாக யு.எஸ். ஓபன் போட்டியில் காலிறுதிக்கு நுழைந்துள்ளார். விம்பிள்டன் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார். 

நடப்பு சாம்பியான ரஷியாவைச் சேர்ந்த 26 வயது மெத்வதேவ், உடல்நலக் குறைவு காரணமாகத் தனது ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகப் பேட்டியளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.