ஒவ்வொரு வருடமும் விராட் கோலி அடித்த சதங்களின் எண்ணிக்கை

இந்திய அணிக்கு அறிமுகமான 2008 முதல் ஒவ்வொரு வருடமும் விராட் கோலி எடுத்த சதங்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு வருடமும் விராட் கோலி அடித்த சதங்களின் எண்ணிக்கை
Published on
Updated on
1 min read

இரண்டரை  ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் சதம் எடுத்துள்ளார் விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக. இது அவருடைய 71-வது சர்வதேச சதம். இந்தச் சதத்தின் மூலம் பல சாதனைகள் படைத்துள்ளார் கோலி. 

மேலும் கடந்த 2014 முதல் 2019 வரை ஒரு வருடம் தவிர அனைத்து வருடங்களிலும் குறைந்தது 7 சதங்கள் எடுத்தவர் கோலி. ஆனால் 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளிலும் அவர் ஒரு சதம் கூட எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த வருடமும் 8 மாதங்கள் முடிந்த நிலையில் மீண்டும் சதம் எடுக்க ஆரம்பித்துள்ளார். 

இந்திய அணிக்கு அறிமுகமான 2008 முதல் ஒவ்வொரு வருடமும் விராட் கோலி எடுத்த சதங்களின் எண்ணிக்கை.

2008 - 0
2009 - 1
2010 - 3 
2011 - 4
2012 - 8
2013 - 6
2014 - 8
2015 - 4
2016 - 7 
2017 - 11
2018 - 11
2019 - 7
2020 - 0
2021 - 0
2022 - 1*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com