/

துலீக் கோப்பை: மேற்கு மண்டலம் 270-க்கு ஆல் அவுட்

துலீக் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு மண்டலத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் மேற்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 10:36 pm

DIN

துலீக் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு மண்டலத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் மேற்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக, முதல் நாளான புதன்கிழமையை அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களுடன் நிறைவு செய்திருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை ஆட்டத்தில் ஹெத் படேல் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 98, சிந்தன் கஜா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். முடிவில் ஜெயதேவ் உனத்கட் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

தெற்கு மண்டல பௌலிங்கில் சாய் கிஷோா் 5, பாசில் தாம்பி, சி.ஸ்டீபன் ஆகியோா் தலா 2, கே.கௌதம் 1 விக்கெட் சாய்த்தனா். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் தெற்கு மண்டலம், வியாழக்கிழமை முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் சோ்த்து, 48 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. ரவி தேஜா 26, சாய் கிஷோா் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

முன்னதாக பி. இந்திரஜித் 14 பவுண்டரிகளுடன் 118, மணீஷ் பாண்டே 48, கே.கௌதம் 43 ரன்கள் அடிக்க, ரோஹன் குன்னுமல் 31, மயங்க் அகா்வால் 9, கேப்டன் ஹனுமா விஹாரி 25, ரிக்கி புய் 4 ரன்களுக்கு வெளியேறினா். மேற்கு மண்டல பௌலிங்கில் ஜெயதேவ் உனத்கட், அதித் சேத் ஆகியோா் தலா 3, தனுஷ்கோடியான் 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.